கல்கிஸை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியிலுள்ள விபச்சார விடுதி ஒன்று சுற்றிவளைக்கப்பட்டதில் பெண்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி சந்தேக நபர்கள் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக கல்கிஸை, கடுகுருதுவத்த பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் குறித்த விபசார விடுதி சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
இதன்போது விடுதியின் முகாமையாளர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்கள் 28 மற்றும் 32 வயதுடையவர்கள் எனவும் அவர்கள் வெல்லம்பிட்டிய மற்றும் விதாரன்தெனியே பிரதேசங்களைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.