Post

Share this post

பெண் சட்டத்தரணி மர்மமான முறையில் படுகொலை!

இரத்தினபுரியில் மர்மமான முறையில் உயிரிழந்த பெண் சட்டத்தரணி ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பெல்மடுல்ல – புலத்வெல்கொட பகுதியிலுள்ள வீடொன்றில் 40 வயதுடைய சட்டத்தரணியான துஷ்மந்தி அபேரத்ன என்ற பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சட்டத்தரணியின் குடும்பத்தினர் பொலிஸாரிடம் முறையிட்டுள்ளனர்.
கொலை செய்யப்படுதற்கு முதல்நாள் இரவு உயிரிழந்த பெண் குடும்பத்தாருக்கு அனுப்பிய குறுஞ்செய்தி குறித்தும் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a comment