துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடிய மணமகள்! (வீடியோ)

வட இந்திய மாநிலமான உத்தரபிரதேசத்தில் தனது திருமண நிகழ்வில் துப்பாக்கியால் சுட்ட மணமகளை பொலிஸார் தேடிவருகின்றனர்.
திருமணநாளில்,அந்த மணமகள் தனது கணவரின் அருகில் அமர்ந்து நான்கு முறை வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுடுவதைக் காட்டும் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தை அடுத்து காணாமல் போன மணமகள் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
Celebration Video from #Hathras, #UttarPradesh.
Bride firing gun in own wedding.#India #GunControlNow pic.twitter.com/7UFMj2THOF
— Chaudhary Parvez (@ChaudharyParvez) April 9, 2023