Post

Share this post

இலங்கையில் பரவும் காய்ச்சல் – 15 பேர் மரணம்

நாடு முழுவதும் இன்புளுவன்சா காய்ச்சல் மீண்டும் வேகமாக பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கர்ப்பிணிப் பெண்கள், சிறு குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் சுவாச பிரச்சினை உள்ளவர்கள் இந்த நோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
அதிக காய்ச்சல், தசைவலி, மூக்கில் நீர் வடிதல், தொண்டை புண் மற்றும் சளி போன்றவை இதன் அடிப்படை அறிகுறிகளாகும் என விசேட வைத்தியர் பிரியங்கர ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, காலி மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த வருடத்தின் கடந்த மூன்றரை மாதங்களில் எலிக்காய்ச்சல் காரணமாக 15 பேர் உயிரிழந்துள்ளதாக காலி மாவட்ட தொற்றுநோய் நிபுணர் எரந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

Leave a comment