Post

Share this post

பதவியில் இருந்து நீக்கப்படும் மகிந்த?

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு வலுவான தலைவர் ஒருவர் நியமிக்கப்படுவார் என பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் சிங்கள தமிழ் புத்தாண்டு முடிவதற்குள் இந்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், எண்ணை வைக்கும் சுப நேரத்தில் புதிய தலைவரை அறிவிக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளர்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சமகால தலைவராக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உள்ளார்.
இந்நிலையில் தற்போது வெளியாகி உள்ள அறிவிப்பிற்கமைய, மகிந்த ராஜபக்ச நீக்கப்படவுள்ளார் என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

Leave a comment