குளியலறையில் மர்மமான முறையில் உயிரிழந்த வைத்தியர்!

உடமாதுர பிரதேச ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் உத்தியோகபூர்வ இல்லத்தின் குளியலறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
36 வயதுடைய திருமணமான ஆயுர்வேத வைத்தியரான மதுசங்க ஜயசூரிய என்பவரே உயிரிழந்துள்ளார்.
உடமதுர ஆயுர்வேத வைத்தியசாலையில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் 17 ஆம் திகதி காலை உத்தியோகபூர்வ இல்லத்தின் குளியலறைக்குச் சென்றபோது குறித்த வைத்தியர் உயிரிழந்து காணப்பட்டுள்ளார்.