Post

Share this post

காலவரையறையின்றி சத்திர சிகிச்சைகளும் இடை நிறுத்தம்!

தேசிய கண் வைத்தியசாலையின் சகல அறுவை சிகிச்சைகள் நேற்று (19) முதல் காலவரையறையின்றி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.
அறுவை சிகிச்சை அறையில் கிருமிகள் பரவியதன் காரணமாக இவ்வாறு சத்திர சிகிச்சைகள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மருத்துவமனையின் பணிப்பாளர் மருத்துவர் ஏ.ஆர்.எம். தௌபிக் குறிப்பிட்டார்.
பரவுவதை துரிதமாக அகற்றி வழமை நிலைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
எனினும் அறுவை சிகிச்சை அறையை மீளத் திறப்பது தொடர்பில குறிப்பிட்ட திகதியை அறிவிக்க முடியாது எனவும் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை இது தொடர்பில், அறுவை சிகிச்சை அறைக்குள் கிருமிகள் எவ்வாறு பரவியது என்பது தொடர்பில் சுகாதார அமைச்சினால் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டுமென சுகாதார நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Leave a comment