இலங்கையின் போதைப்பொருள் கடத்தல்காரரான தெமட்டகொட சமிந்தவின் பிரதான உதவியாளர் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
விசேட அதிரடிப்படையின் புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தெமட்டகொட பிரதேசத்தை சேர்ந்த 58 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரனுமான தெமட்டகொட சமிந்த என்ற சமிந்த ரவி ஜயநாத்தின் மகன் மலீஷாவின் வழிகாட்டலின் கீழ் இவர் போதைப்பொருள் கடத்தலை மேற்கொண்டு வருவதாக தெரியவந்துள்ளது.
அங்கு சந்தேக நபரிடம் இருந்து 25 கிராம் ஹெரோயின் அடங்கிய 400 பொதிகளை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கண்டெடுத்துள்ளனர்.
சந்தேக நபரும் ஹெரோயினும் மேலதிக விசாரணைகளுக்காக தெமட்டகொட பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.