Post

Share this post

பள்ளிவாசல்களுக்கு சிறப்பு பாதுகாப்பு!

ரமழான் தினம் மற்றும் அதற்கு முந்தைய நாட்களில் மத வழிபாடுகள் நடைபெறும் இஸ்லாமிய பள்ளிவாசல்களை அடையாளம் கண்டு சிறப்பு பாதுகாப்பு வேலைத்திட்டத்தை முன்னெடுக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதனிடையே குண்டு தாக்குதல் நடத்தப்படும் என கிடைத்த தகவல் குறித்தும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
ரமழானில் அடையாளம் காணப்பட்ட பள்ளிவாசல்களுக்கு பாதுகாப்பு வழங்கும் வேலைத்திட்டத்தை முன்னெடுக்குமாறு மாகாணங்களுக்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு பொலிஸ் மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்.
பாணந்துறை பிரதேசத்தில் உள்ள பள்ளிவாசல்களுக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டதாக மேற்கொள்ளப்படும் பிரச்சாரம் பொய்யானது. ஆனால் அக்குறணை சம்பவத்தை எடுத்துக் கொண்டால், அக்குறணை நகரில் வெடிப்புச் சம்பவம் நடக்கவிரு்பபதாக பொலிஸ் அவசர இலக்கத்திற்கு தகவல் கிடைத்திருந்தது. இந்த தகவல் பொய்யா அல்லது உண்மையா என்பதை உறுதிப்படுத்தும் வரையில் அந்த இடத்திற்கு நாங்கள் பாதுகாப்பு வழங்க வேண்டிய தேவை இருந்தது என அவர் தெரிவித்துள்ளார்.
அதன்படி, அந்தப் பகுதிக்குப் பொறுப்பான உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் அந்தப் பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டு, பள்ளிவாசல்களின் மத குருக்களுடன் கலந்துரையாடி, தேவையான பாதுகாப்புத் திட்டத்தை முன்னெடுத்தார்.
ஆனால் அந்த தகவல் பொய்யான தகவல் என்பதை இப்போது புரிந்து கொண்டுள்ளோம். பொய்யான தகவலை வழங்கிய நபரை கண்டறிய அது தொடர்பில் தற்போது விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a comment