Post

Share this post

குரு பெயர்ச்சி – ராஜயோகம் யாருக்கு? (வீடியோ)

குரு பகவான் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு இன்று (சனிக்கிழமை) பெயர்ச்சி ஆகிறார்.
திருக்கணிதப்படி சித்திரை மாதம் 9 ஆம் திகதி (22.4.2023) சனிக்கிழமை அதிகாலை 5.14 மணிக்கு மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சி அடைந்துள்ளார்.
வாக்கிய பஞ்சாங்கப்படி சனிக்கிழமை இரவு 11.26 மணிக்கு குருபகவான் மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்குச் செல்கிறார்.
குருபலன் பெறும் ராசிகள் : மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, மீனம்.
இவை தவிர மற்ற ராசிக்காரர்கள் பரிகாரம் செய்து குரு பலனைப் பெறலாம் என்று ஜோதிடர் எம். ஜெயக்குமார் குறிப்பிட்டுள்ளார்.
நவக்கிரகங்களில் முழு சுப கிரகம். வாழ்வில் அனைத்து விதமான செல்வங்களையும் அளிப்பவர் – சப்த ரிஷிகளில் ஆங்கிரஸ முனிவரின் மகன் குரு என்றும் பிரகஸ்பதி என்றும் வியாழ பகவான் அழைக்கப்படுகிறார்.
இவர் தேவர்களுக்கு எல்லாம் குரு. நம் வாழ்வில் 2 விஷயங்கள் மிக முக்கியம். அதாவது தனம் என்று சொல்லக்கூடிய பணம், 2-வது புத்திர சம்பத்து என்று சொல்லக்கூடிய குழந்தை செல்வம். இந்த இரண்டையும் அளிக்கக் கூடிய சர்வ வல்லமை பெற்ற கிரகம் குரு.
சோபகிருது வருஷம் உத்திராயணம் சிசிரருது முடிந்து வஸந்து ருது சித்திரை மாதம் 9 ம் நாள் இதற்குச் சரியான ஆங்கில திகதி 22.04.2023 சுக்லபட்சம் துவிதியை திதி, சனிக்கிழமையும் சித்த யோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் குரு பகவான் மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு மாறுகிறார்.
மேஷ ராசிக்கு வரும் குரு பகவான் தொடர்ந்து 1 வருட காலத்திற்கு இந்த ராசியில் சஞ்சாரம் செய்து அருளாசி வழங்குவார்.
தற்போது மாறக்கூடிய குருபகவான் எந்த ஸ்தானத்தை பார்க்கிறாரோ அந்த ஸ்தானம் பலமும், விருத்தியும் அடைகிறது. குரு பார்வை சர்வ தோஷ நிவர்த்தி. குருவுக்கு 5,7,9 ஆகிய பார்வைகள் உள்ளன. அதாவது குரு இருக்கும் இடத்தில் இருந்து 5,7,9 ஆகிய இடங்களை பார்வையிடுகிறார். ஐந்தாம் பார்வையும், ஒன்பதாம் பார்வையும் சிறப்புப் பார்வைகளாகும்.
நன்மை பெறும் ராசிகள் : சிம்மம் – துலாம் – தனுசு – மீனம்
பரிகாரத்தின் மூலம் பயன் பெறும் ராசிகள் : ரிஷபம் – கன்னி – விருச்சிகம்
நன்மை தீமை இரண்டும் கலந்துபெறும் ராசிகள் : மேஷம் – மிதுனம் – கடகம் – மகரம் – கும்பம்
குருவிற்கு உண்டான பரிகாரம், ஹோமம் மற்றும் பூஜைகளில் பங்கேற்பதாலும், கல்வி பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவிகளை அளிப்பதாலும், பெரியோர்களிடம் ஆசி பெறுவதாலும் அசுப பலன்களின் தாக்கத்தில் இருந்து விடுபடலாம்.
குருப்பெயர்ச்சியில் ஏற்படும் சுப பலன்களை அவரவர் ஜென்ம ஜாதகத்தில் உள்ள தசா புத்திக்கு ஏற்ப குருபகவான் அளிப்பார். அதாவது தசா புத்தியானது உங்களுக்கு சாதகமாக இருந்தால், அதிகளவு நன்மையையும், குறைந்தளவு தீமையும் தரவல்லவர்.

Leave a comment