Post

Share this post

மற்றுமொரு படுகொலைச் சம்பவம்!

மிரிஹான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்வல வீதிப் பகுதியில் இன்று (23) அதிகாலை நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இத்தாக்குதலில் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதே பகுதியைச் சேர்ந்த சஜித் மதுசங்க (34) என்ற நபரே பலத்த காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார்.

காயமடைந்தவர் தெனியாய பகுதியைச் சேர்ந்த 53 வயதுடையவர் எனவும் உயிரிழந்தவரின் உறவினர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குற்றச் செயலின் பின்னர் சந்தேகநபர் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

எவ்வாறாயினும், சந்தேக நபர் உயிரிழந்தவரின் உறவினர் எனவும், இரு தரப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக இந்த கத்திக் குத்து இடம்பெற்றுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

Leave a comment