இந்தியாவின் மேற்குவங்கத்தில் 10-ம் வகுப்பு படித்து வந்த சிறுமியை, ஜாவேத் அக்தர் மற்றும் அவனது நண்பர்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்து குளத்தில் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மேற்குவங்க மாநிலத்தின் வடக்கு தினாஜ்பூர் மாவட்டம் தானா கலியாகஞ்ச் பகுதியைச் சேர்ந்த சிறுமி, அங்குள்ள பாடசாலையில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த சூழலில், அதே பகுதியைச் சேர்ந்த ஜாவேத் அக்தர் மற்றும் அவரது நண்பர்கள், சிறுமியை நேற்று முன்தினம் இரவு கூட்டு பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்கள்.
பின்னர் விஷயம் வெளியில் தெரிந்தால் பிரச்னையாகி விடும் என்பதால், அச்சிறுமியை கொலை செய்து, அருகிலுள்ள குளத்தில் வீசி விட்டனர். சிறுமியைக் காணாமல் தவித்த அவரது பெற்றோர், பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் விரக்தியில் இருந்தனர்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் காலையில் சிறுமியின் சடலம் அருகிலுள்ள குளத்தில் மிதப்பது தெரியவந்தது. இதையடுத்து, ஊர் மக்கள் திரண்டு சிறுமியின் சடலத்தை மீட்டனர். பொலிஸ் விசாரணையில் சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
இதனால் ஆத்திரமடைந்த ஊர் மக்கள், குற்றவாளிகளை கைது செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஜாவேத் அக்தர் பொலிஸில் சரணடைந்திருக்கிறான். அவனிடம் பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டிருக்கிறார்கள்.