Post

Share this post

மஹிந்தவின் ஊடாக இலங்கைக்கு கிடைக்கும் பல பில்லியன்கள்! வௌியான தகவல்!

மஹிந்த ராஜபக்ச மீண்டும் பிரதமரானால் இலங்கைக்கு 5 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு சீன அரசு தயாராக இருக்கின்றது என இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதற்கமைய மஹிந்தவை மீண்டும் பிரதமராக்குவதற்கான நடவடிக்கைகள் மொட்டுக் கட்சியால் இரகசியமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று தெரிவிக்கப்படுகின்றது.
அவ்வாறு மஹிந்த மீண்டும் பிரதமராகி சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை எதிர்ப்பாரானால் சர்வதேச நாணய நிதியத்தின் மிகுதி நிதி கிடைக்காமல் போய்விடும். அதை ஈடுசெய்வதற்காகவும் இலங்கையை மீண்டும் தனது பிடிக்குள் கொண்டு வருவதாகவுமே சீனா இவ்வாறான உதவித் திட்டத்தை அறிவிக்கவுள்ளது என்று இராஜதந்திர வட்டாரத்தில் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.இ
பொருளாதாரப் பிரச்சினையின் தொடக்கத்தில் சீனா இலங்கைக்கு 4 பில்லியன் அமெரிக்க டொலரை வழங்கி உதவுவதற்கு முன்வந்தது.

Leave a comment