தென்னிந்திய திரைப்பட நடிகர் சரத் பாபு உடல் நலக்குறைவு காரணமாக மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சரத் பாபுவுக்கு தற்போது 71 வயது ஆகின்ற நிலையில் விரைவில் குணமடைந்து நலம்பெற வேண்டுமென பிரபலங்கள், சக நடிகர்கள், ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
அண்மையில் அறிக்கைகளின்படி உடல்நலக்கோளாறு காரணமாக சரத்பாபுவை ஹைதராபாத்திற்கு மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
ஹைதராபாத்தின் கச்சிபௌலியில் உள்ள ஏஐஜி மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் அவர் சற்று கவலைக்குரிய உடல் நலத்தில் இருந்து உடல்நலனில் தேறி வருவதாக முடிவுகளைக் காட்டுவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
எனினும் அவர் உடனடியாக டிஸ்சார்ஜ் செய்யப்படுவது தொடர்பில் மருத்துவமனை நிர்வாகம் எதுவும் கூறவில்லை.
1971 ஆம் ஆண்டு கே பாலச்சந்தரின் பட்டின பிரவேசம் மூலம் திரையில் அறிமுகமான சரத்பாபு, அண்ணாமலை, முத்து, பாபா, புதிய கீதை உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.