தனது தொண்டர்களை, சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கச் சொன்னதற்காகக் கைது செய்யப்பட்ட பாதிரியாருக்குச் சொந்தமான பண்ணை நிலத்தில் தோண்ட தோண்ட சலடங்கள் கிடைத்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பாரதிரியார் பால் மகேன்ஸிக்குச் சொந்தமான பண்ணை நிலத்திலிருந்து இதுவரை 39 உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டிருப்பதாகவும், இன்னும் உடல்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதால், இந்த எண்ணிகைக அதிகரிக்கும் என்றும் காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
குட் நியூஸ் சர்வதேச தேவாலயத்தில் கடந்த வாரம் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தவர்களில் 43 பேர் பலியானதால், இன்னமும் நான்கு பேரின் உடல்கள் தோண்டி எடுக்கப்பட வேண்டும் என்று தகவல்கள் கூறப்படுகின்றன.
பாதிரியார் பால், பொலிஸ் காவலில் வைத்து விசாரிக்கப்பட்டால் பல உண்மைகள் தெரிய வரும் என்று பொலிஸார் கருதுகிறார்கள்.