Post

Share this post

வரி வருமானம் அதிகரிப்பு

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் 2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் அதாவது ஜனவரி, பெப்ரவரி மற்றும் மார்ச் ஆகிய மூன்று மாதங்களில் 316,619 மில்லியன் ரூபாவைச் சேகரித்துள்ளது.
கடந்த ஆண்டின் இதே காலாண்டில், வருவாய்த் திணைக்களம் 146,565 மில்லியன் ரூபாவை வசூலித்திருந்தது.
இதன்படி, கடந்த வருடத்தின் முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில் இது 216 வீத அதிகரிப்பாகும்.
அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கை மற்றும் நாட்டின் பொருளாதார செயற்பாடுகள் படிப்படியாக மீட்சியடைந்தமை மற்றும் வரி நிர்வாகத்தின் வினைத்திறன் அதிகரிப்பு என்பன வரி வருமானத்தை அதிகரிக்க வழிவகுத்துள்ளதாக திணைக்களம் தனது அறிவிப்பில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

Leave a comment