அயர்லாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அயர்லாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய அயர்லாந்து அணி சகல விக்கெட்களையும் இழந்து 492 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி விக்கெட் இழப்பின்றி இதுரையில் 185 ஓட்டங்களை பெற்றுக் கொண்டுள்ளது.
துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்ப்பில் அணித் தலைவர் திமுத் கருணாரத்ன தனது 16 ஆவது சதத்தை பதிவு செய்துள்ளார்.
அதனடிப்படையில் திமுத் கருணாரத்ன 100 ஓட்டங்களுடன் நிஷான் மதுசங்க 78 ஓட்டங்களுடனும் தொடர்ந்து விளையாடி வருகின்றனர்.