மலையாள சினிமாவின் மூத்த நடிகரான மாமுக்கோயா நாடக கலைஞராக தனது வாழ்க்கையை தொடங்கியவர். பின்னர் திரைத்துறையில் காமெடி நடிகராக பிரபலமடைந்தார்.
450 படங்களுக்கு மேல் நடித்துள்ள மாமுக்கோயா இரண்டு முறை மாநில அரசின் விருதுகளைப் பெற்றுள்ளார்.
சமீபத்தில் கால்பந்து போட்டியின் தொடக்கவிழாவில் கலந்து கொண்ட 76 வயதான மாமுக்கோயாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டு வான்டூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக கோழிக்கோட்டில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு செயற்கை சுவாச உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார். மேலும், இவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், நடிகர் மாமுக்கோயா இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவிற்கு மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவு தான் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.