தனது கன்னி இரட்டைச் சதத்தை பதிவு செய்த மதுஷ்க!

அயர்லாந்து அணிக்கு எதிராக தமது முதல் இன்னிங்ஸில் விளையாடி வரும் இலங்கை அணிக்காக இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் நிஷான் மதுஷ்க தனது முதலாவது இரட்டை சதத்தை பதிவு செய்துள்ளார்.
தற்போது அவர் 202 ஓட்டங்களைப் பெற்று துடுப்பெடுத்தாடி வருகிறார்.
22 நான்கு ஓட்டங்கள் மற்றும் ஒரு ஆறு ஓட்டம் அடங்களாக அவர் இந்த ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.
நிஷான் மதுஷ்க தனது முதல் சதத்தை இரட்டை சதமாக அடித்த இரண்டாவது இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் வீரர் ஆவார்.
முன்னதாக 1987 ஆம் ஆண்டு இலங்கையின் முன்னாள் வீரர் பிரெண்டன் குருப்பு தனது முதல் டெஸ்ட் சதத்தை இரட்டை சதமாக பதிவு செய்திருந்தார்.
இலங்கை மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி சற்றுமுன்னர் வரை ஒரு விக்கெட் இழப்பிற்கு 492 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
மறு முனையில் ஆட்டமிழக்காது துடுப்பெடுத்தாடி வரும் குசல் மெந்திஸ் 160 ஓட்டங்களை பெற்றுள்ளார்.
இலங்கை அணித் தலைவர் திமுத் கருணாரத்ன 115 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.
நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து தனது முதல் இன்னிங்ஸிற்காக 492 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.