Post

Share this post

பல பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடை

பல பிரதேசங்களுக்கு இன்று இரவு 09 மணி வரை நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அம்பத்தலயில் இருந்து நீர் விநியோக குழாய் ஒன்றின் அவசர பராமரிப்பு காரணமாக நீர் விநியோகத்தை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கொழும்பின் 04, 05, 07 மற்றும் 08 ஆகிய பகுதிகளுக்கு இவ்வாறு நீர் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், கடுவெல மற்றும் கோட்டே நகரசபை பகுதிகளிலும் மஹரகம மற்றும் பொரலஸ்கமுவ நகரசபை பகுதிகளிலும் நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது.

Leave a comment