அஜித்தின் நெருங்கிய நண்பரும் அஜித் நடித்த பல திரைப்படங்களை தயாரித்தவருமான நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி உடல்நல குறைவால் கடந்த சில மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சையின் பலன் இன்றி நேற்று முன்தினம் காலமானார். அவரின் மறைவுக்கு திரையுலகினர் பலரும் தமது இரங்கலை தெரிவித்திருந்தனர்.
அஜித்தின் நெருங்கிய நண்பரும் தயாரிப்பாளமான நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி கடந்த எட்டு மாத காலமாக புற்றுநோயால் அவதியுற்று சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு அவர் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று மாலை சென்னையில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அஜித்தின் நடித்த ’ராசி’, ’வாலி’, ’முகவரி’, ’சிட்டிசன்’, ’ரெட்’, ‘வில்லன்’, ’ஆஞ்சநேயா’, ’ஜீ’ , ‘வரலாறு’ ஆகிய படங்களை தயாரித்தவர் தயாரிப்பாளர் சக்கரவர்த்தி என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி சிம்பு நடித்த ’காளை’, ’வாலு’, விக்ரம் நடித்த ‘காதல் சடுகுடு’ உள்பட ஒரு சில படங்களையும் தயாரித்து உள்ளார். மேலும் கடந்த ஆண்டு வெளியான விமல் நடித்த ’விலங்கு’ என்ற வெப் தொடரிலும் அவர் ஒரு கேரக்டரில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தியின் மறைவு தமிழ் திரையுலகிற்கு மிகப்பெரிய இழப்பு என திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.