Post

Share this post

அயல் வீட்டில் புகுந்து துப்பாக்கிச்சூடு – 5 பேர் பலி!

அமெரிக்காவின் டெக்ஸாஸில் உள்ள வீட்டில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கிளீவ்லேண்ட் பகுதியில் உள்ள வீட்டில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதில் 2 சிறுவர்கள் உட்பட 5 பேர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

38 வயதான பிரான்ஸிஸ்கோ ஒரோபிசா என்பவரே தாக்குதல்தாரி என அடையளாம் காணப்பட்டுள்ளார்.

இவர் திடீரென வீட்டின் தோட்டத்தில் துப்பாக்கியால் சுட தொடங்கியபோது அக்கம்பக்கத்தினர் அவரை நிறுத்த சொன்னார்கள்.

இதையடுத்து பக்கத்து வீட்டுக்குள் புகுந்து 8 வயது மற்றும் 15 வயது சிறுவர்கள் உட்பட 5 பேரை அவர் கொன்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சுடப்பட்ட அனைவரும் கிட்டத்தட்ட மரணதண்டனை பாணியில் கழுத்தில் சுடப்பட்டனர்.

பாதிக்கப்பட்டவர்களில் சிலர் குழந்தைகளைப் பாதுகாக்க பெரும் முயற்சி எடுத்ததும் தெரியவந்துள்ளது.

தாக்குதலுக்கு பின்னர் பிரான்ஸிஸ்கோ அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

Leave a comment