தனது கணவரின் மரணம் குறித்து வனிதா வௌியிட்டுள்ள அறிக்கை!

பீட்டல் பாலின் மரணத்திற்கு வனிதா விஜயகுமார் இரங்கல் தெரிவித்துள்ளார்.
நடிகை மஞ்சுளா- விஜயகுமாரின் மூத்த மகள் வனிதா விஜயகுமார். சிறிய வயது முதலே நடித்துக் கொண்டிருக்கிறார். விஜய்யுடன் சந்திரலேகா எனும் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். நடிகர் ஆகாஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு ரீஹரி என்ற மகனும் ஜோவிகா என்ற மகளும் பிறந்தனர். இதையடுத்து கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். பின்னர் மகளை இவர் வைத்துக் கொண்டு மகன் தந்தையுடன் வசித்து வருகிறார். அதன்பின் ஆனந்தராஜ் என்ற தொழிலதிபரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். இந்த திருமண வாழ்க்கையும் சுமூகமாக அமையவில்லை. தொடர்ந்து, 2020ல் பீட்டர் பால் என்பவரை மூன்றாவது முறையாக கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்துக் கொண்டார்.
அவர் மது, புகைப்பழக்கத்திற்கு அடிமையானதால் அவரை வீட்டை விட்டே வெளியேற்றிவிட்டார். இந்நிலையில், கல்லீரல் பாதிப்பு உள்ளிட்ட நோய்களால் அவதிப்பட்டு வந்த பீட்டர் பால் உயிரிழந்தார். இதற்கு இரங்கல் தெரிவித்த வனிதா, எனது அம்மா ஒரு விஷயத்தை சொல்வார். நீயே உனக்கு உதவினால்தான் கடவுளும் உனக்கு உதவுவார்.
இந்த பாடத்தை எல்லோரும் கற்றுக் கொள்ள வேண்டும். முக்கியமான முடிவெடுக்க வேண்டிய நேரங்களில் எல்லாருமே அவரவர் பாதையை தேர்வு செய்கிறார்கள். நீங்கள் சந்தித்த துயரங்களுடன் போராடி தற்போது அமைதியை அடைந்திருப்பீர்கள் என நிச்சயம் நம்புகிறேன். நீங்கள் இந்த உலகத்தை விட்டு சென்றதற்காக வருத்தப்படும் அதே நேரத்தில் நீங்கள் இப்போது சிறந்த அமைதியான இடத்தில் இருப்பீர்கள் என தெரியும். எங்கே இருந்தாலும் மகிழ்ச்சியாக இருங்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.