நடிகர் சரத்பாபு குறித்து வௌியான செய்தியில் உண்மையில்லை!

நடிகர் சரத்பாபு காலமானதாக சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் பரவி வந்தன.
இந்த நிலையில் வதந்திகளை நம்ப வேண்டாம் என அவரது குடும்பத்தினர் விளக்கம் அளித்துள்ளனர்.
இதுதொடர்பாக சரத்பாபுவின் பிஆர்ஓ வெளியிட்ட அறிக்கையில், “நடிகர் சரத்பாபு உடல்நலம் தேறி வருகிறார். அவரது உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளுக்கு குடும்பத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.