Post

Share this post

அரச ஊழியர்களுக்கு நிவாரணம்!


IMF உடனான அடுத்த கட்ட பேச்சுவார்த்தையில் நிவாரணம் கிடைக்குமாயின் அரச ஊழியர்களுக்கு முதலில் நிவாரணம் வழங்கப்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் (03) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் என்ற ரீதியில் நாம் ஒரு துறை பற்றி மட்டும் சிந்திக்கவில்லை எனவும் அமைச்சர் பந்துல குறிப்பிட்டுள்ளார்.
இவ் வேளையில் அனைத்து அரச ஊழியர்கள் மீதும் பாரிய வரிச்சுமை சுமத்தப்பட்டுள்ளது என்பதை அரசாங்கம் ஏற்றுக் கொள்வதாகவும் அமைச்சர் பந்துல மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a comment