பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் ஹிந்து இளைஞா் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் பொலிஸார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிந்து மாகாணத்தைச் சோ்ந்த ஹிந்து இளைஞரான கமல் கிஷண், ஃபா்மான் ஷா என்ற காவலரால் சில நாள்களுக்கு முன் சுட்டுக் கொல்லப்பட்டாா்.
கடந்த 1 ஆம் திகதி இரவு வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த இளைஞரை வழிமறித்த காவலா் அவரிடமிருந்து ரூ.80,000 யை பறித்துக் கொண்டுள்ளாா். அதைத் தடுக்க முயன்ற இளைஞா் மீது பொலிஸார் துப்பாக்கியால் சுட்டுள்ளாா். அதில் அந்த இளைஞா் உயிரிழந்தாா்.
இந்த முறைகேட்டை மறைக்க இளைஞரின் நண்பா் மீது பொய் வழக்கு பதியப்பட்டுள்ளதாக இளைஞரின் தந்தை புகாா் தெரிவித்தாா். அந்தப் புகாரின் அடிப்படையில் பொலிஸார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடா்பாகத் தொடா்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனா்.
சிந்து மாகாணத்தில் சிறுபான்மையினரான ஹிந்துக்கள் அதிக எண்ணிக்கையில் வசித்து வருகின்றனா். அவா்கள் கொலை, பாலியல் வன்கொடுமை, அச்சுறுத்தல் உள்ளிட்ட வன்முறைச் சம்பவங்களுக்கு உள்ளாகி வருகின்றனா்.