Post

Share this post

புன்னகையுடன் விடை கொடுத்த தோனி!

லக்னெள அணிக்கு எதிரான போட்டியில் கடைசி ஆட்டம் குறித்து தோனியிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு, அவர் சிரித்தபடி அளித்த பதிலுக்கு திடலில் கூடியிருந்த ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.
லக்னெள சூப்பர் ஜெயின்ட் அணிக்கு எதிரான டி-20 ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டாஸ் வென்றது. லக்லெள ஏகனா திடலில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில், வர்ணனையாளர்கள் தோனியிடம் கேள்வி எழுப்பினர்.
முன்னாள் கிரிக்கெட் வீரரும் கிரிக்கெட் வர்ணனையாளருமான டேனி மோரிசன் இது உங்கள் கடைசி ஆட்டம். எந்த அளவுக்கு அனுபவித்து விளையாடுகிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு தோனி, இது என்னுடைய கடைசி ஆட்டம் என்று நீங்கள்தான் முடிவு செய்துள்ளீர்கள். நான் இல்லை என சிரித்தபடி பதிலளித்தார்.
இந்த பதிலால் திடலில் ஆட்டத்தைப் பார்க்க வந்த ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்து கூச்சலிட்டனர்.
தோனி தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 4 முறை சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளது. இனி வரும் காலங்களிலும் தோனி தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்கும் என்பதை தோனி பதில் மூலம் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

Leave a comment