Post

Share this post

இலங்கையில் சுற்றிவளைக்கப்பட்ட விபசார விடுதி!

அறைகளை வாடகைக்கு விடும் போர்வையில் நடத்தப்பட்ட விபசார விடுதி ஒன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
இதபோது விடுதி முகாமையாளரும் விபசார தொழிலில் ஈடுபடவிருந்த பெண் ஒருவரும் உதவியாளர் ஒருவரும் கைது செய்யப்பட்டதாக காலி பொலிஸார் தெரிவித்தனர்.
காலி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சதீஸ் கமகேவின் அறிவுறுத்தலின் பேரில், இலஞ்ச ஒழிப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிஸார் இந்தச் சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.
மேலும் விடுதியில் கைதானவர்களை காலி நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Leave a comment