Post

Share this post

ஆறு பெண் தொழிலாளர்கள் வைத்தியசாலையில்

பொகவந்தலாவ, செல்வகந்த தோட்ட தேயிலைமலையில் தேயிலை கொழுந்து பறித்து கொண்டிருந்த ஆறு பெண் தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்க பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நேற்று (12) மாலை இடம் பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
தேயிலை மலையின் அடிவாரத்தில் இருந்த குளவி கூடு கலைந்து தொழிலாளர்களை தாக்கியதாக காயங்களுக்கு உள்ளான தொழிலாளர்கள் குறிப்பிட்டனர்.
காயங்களுக்கு உள்ளான ஆறு தொழிலாளர்களும் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதோடு பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் குறித்து அச்சமடைய தேவையில்லையென வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி குறிப்பிட்டார்.

Leave a comment