Post

Share this post

விடுதியின் இரண்டாவது மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தை!

இன்று (14) அதிகாலை அஹுங்கல்லையில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியிருந்த குழந்தையொன்று ஹோட்டலின் இரண்டாவது மாடியில் இருந்து தவறி விழுந்துள்ளது.
குருநாகல் பகுதியில் இருந்து வந்த குடும்பத்தின் நான்கு வயது குழந்தையே இவ்வாறு விழுந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
அனர்த்தத்தில் படுகாயமடைந்த குழந்தை பலப்பிட்டிய ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக காலி கராபிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளது.
குருநாகல் பகுதியைச் சேர்ந்த 4 பேர் கொண்ட குடும்ப உறுப்பினர்கள் விடுமுறையைக் கழிப்பதற்காக குறித்த விடுதிக்கு சென்ற போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விடுதியின் இரண்டாவது மாடியில் உள்ள அறையில் தனது தந்தை மற்றும் சகோதரருடன் உறங்கிக் கொண்டிருந்த குழந்தை, அறையை விட்டு வெளியே வந்து மண்டபத்தின் நடந்து சென்றபோது அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

Leave a comment