Post

Share this post

அரச ஊழியர்களுக்கு இன்று முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ள விடயம்!

அனைத்து அரச ஊழியர்களும் இன்று முதல் சேவைக்கு வருகை தருவது மற்றும் சேவை முடிந்து வெளியேறிச் செல்வதை பதிவிடுவதற்காக கைரேகை அடையாள (Fingerprint) இயந்திரத்தை பயன்படுத்துவது கட்டாயமாக்கி இருப்பதாக பொது நிர்வாக செயலாளர் ரஞ்ஜித் அசோக்க தெரிவித்துள்ளார்.
அரச ஊழியர்கள் சேவைக்கு வருவது, சேவை முடிந்து செல்லும்போது கைரேகை அடையாள (Fingerprint) இயந்திரத்தை பயன்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளமை தொடர்பில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
அனைத்து அரச ஊழியர்களும் தங்களின் சேவை நிலையங்களுக்கு வருகை தருதல் மற்றும் சேவை முடிந்து வெளியேறிச் செல்வதை பதிவிடுவதற்காக கைரேகை அடையாள (Fingerprint) இயந்திரத்தை பயன்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் இந்நடவடிக்கை அமுலுக்கு வரவுள்ளது.
குறித்த சுற்று நிருபம் அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதான செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள், மாகாண செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் அரச கூட்டுத்தாபனங்களின் நியதிச்சட்ட நிறுவனங்களின் தலைவர்கள் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Leave a comment