Post

Share this post

மஹிந்தவின் பிரதமர் பதவி குறித்து விளக்கமளித்த SLPP!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் பதவிக்கு நியமிக்கத் தயாராகி வருவதாக வெளியாகியுள்ள செய்தியில் உண்மையில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், அந்த பொய்யான செய்திகளை வன்மையாக நிராகரிப்பதாக தெரிவித்தார்.
அத்துடன், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுக்கப்படவில்லை என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

Leave a comment