Post

Share this post

சொந்தமாக கார் வாங்கிய கண்ணன்!

விஜய் தொலைக்காட்சியில் குடும்ப பாங்கான கதைக்களத்தில் ஒளிபரப்பாகி வரும் தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். அண்ணன் – தம்பிகள், கூட்டுக் குடும்பம் என்றால் எப்படி இருக்கும் போன்றவற்றை இந்த தொடர் காட்டி வருகிறது.
தற்போது இவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள், எப்போது இணைவார்கள் என்பது தெரியாது.
கதையில் இந்த வாரம் மூர்த்தி தனியாக செல்ல முடிவு எடுக்க கதிர் அவர்களை தடுத்துவிடுகிறார்.
இந்த தொடரில் கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சரவண விக்ரம். இவருக்கு விஜய் டெலிவிஷன் விருதில் சிறந்த துணை கதாபாத்திரத்திற்காக விருது கிடைத்துள்ளது.
அதுவே அவருக்கு ஒரு மகிழ்ச்சியான விஷயம், இந்த நிலையில் தான் சரவண விக்ரம் புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார். காருடன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு அவரே இந்த சந்தோஷ செய்தியை கூறியுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by SaravanaVickram (@saravanavickram)

Leave a comment