அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரிலுள்ள 65 பெண்களுக்கு தபால் மூலம் பயன்படுத்தப்பட்ட ஆணுறைகளை அனுப்பப்பட்டமை குறித்து அவுஸ்திரேலிய பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த ஆணுறைகள் மெல்பேர்னின் தென் கிழக்கு மற்றும் கிழக்குப் பகுதியிலுள்ள முகவரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. தபால் அனுப்பபட்ட பெண்கள் அனைவரும், மெல்பேர்னின் கில்ப்ரேடா கல்லூரியில் 1999 ஆம் ஆண்டில் கல்வி கற்றவர்கள் என நம்பப்படுகிறது.
பயன்படுத்தப்பட்ட ஆணுறை அனுப்பப்பட்டமை குறித்து முதல் தடவையாக கடந்த மார்ச் மாதம் பெண்ணொருவர் தெரிவித்திருந்தார். இறுதியாக கடந்த திங்கட்கிழமை ஒருவர் இது குறித்து அறிவித்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பெண்களுக்கு வந்த தபால் பொதியில், பயன்படுத்தப்பட்ட ஆணுறையுடன் கையால் எழுதப்பட்ட கடிதமும் அனுப்பப்பட்டிருந்தது. பாடசாலையின் பழைய வருடாந்த புத்தகம் ஒன்றிலிருந்து முகவரிகள் பெறப்பட்டிருக்கலாம் என பெண்கள் சந்தேகிக்கின்றனர் என ‘ஹெரால்ட் சன்’ பத்திரிகை தெரிவித்துள்ளது.
மேலும் இது தொடர்பாக விசாரிணை நடத்தி வரும் பொலிஸார், இது குறித்து தகவல்கள் தெரிந்தவர்கள் அத்தகவல்களை வெளிப்படுத்த முன்வருமாறு கோரியுள்ளனர்.