Post

Share this post

குழந்தை கடத்தல் குறித்து பொலிஸார் வௌியிட்டுள்ள அறிக்கை!

சமூக வலைதளங்களில் தற்போது பரவி வரும் பிரச்சாரம் தொடர்பில் விளக்கமளித்து பொலிஸார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அதில், சமூக வலைத்தளங்கள் ஊடாக பரவி வரும் சிறுவர்களை கடத்த முயற்சிக்கும் குழுவொன்று தொடர்பில் அக்மீமன பொலிஸ் நிலையத்தின் ஊடாக அறிவித்தல் ஒன்று வௌியிடப்பட்டுள்ளதாக வௌியான செய்தி தொடர்பில் அக்மீமன பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விளக்கமளித்தாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, சிறுவர்களை கடத்த முயற்சிக்கும் குழு தொடர்பில் அக்மீமன பொலிஸாரினால் சமூக ஊடகங்கள் ஊடாக எவ்வித அறிவித்தல்களும் வழங்கப்படவில்லை எனவும், அக்மீமன மற்றும் யக்கலமுல்ல பொலிஸ் பிரிவுகளில் அவ்வாறான சிறுவர் கடத்தல் அல்லது முயற்சிகள் எதுவும் பதிவாகவில்லை எனவும் அக்மீமன பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.
இதன்படி, பரப்பப்படும் செய்திகள் தவறானவை என இலங்கை காவல்துறை பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.

Leave a comment