Post

Share this post

வைத்தியசாலை கழிவறையில் மாணவி பலாத்காரம்

ஆந்திர மாநிலம் மானியம் மாவட்டம் சீதம்பேட்டையை சேர்ந்தவர் 17 வயது கல்லூரி மாணவி.

இவருடைய சகோதரருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. எட்டிவளத்தில் உள்ள வட்டார அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவருடன் கல்லூரி மாணவி தங்கி இருந்தார்.
அதே வார்டில் பாலகொண்டாவை சேர்ந்த ஒருவரும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்தார். அவருக்கு துணையாக 23 வயது வாலிபர் தங்கி இருந்தார்.
அப்போது கல்லூரி மாணவியும் வாலிபரும் நட்பாக பழகினர். நேற்று நள்ளிரவு கல்லூரி மாணவி அங்குள்ள கழிவறைக்கு சென்றார்.
அவரை பின்தொடர்ந்து சென்ற வாலிபர் கழிவறைக்குள் புகுந்தார். கழிவறையில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்தார். அப்போது மாணவி கத்தி கூச்சலிட்டார். வாலிபர் அங்கு இருந்து தப்பி ஓடினார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு ஆஸ்பத்திரியில் இருந்து வந்த ஊழியர்கள் மாணவியை மீட்டனர். ரத்தப்போக்கு அதிக அளவில் இருந்ததால் அவரை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இது குறித்து பாலகொண்டா போலீசில் புகார் செய்தனர். போலீசார் ஆஸ்பத்திரியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
மேலும் வழக்கு பதிவு செய்து மாணவியை பலாத்காரம் செய்த வாலிபரை தேடி வருகின்றனர்.

Leave a comment