Post

Share this post

பொலிஸார் ஆரம்பித்துள்ள விசேட தேடுதல் நடவடிக்கை

பேருந்து ஓட்டுநர்கள் போதைப்பொருள் பயன்படுத்தி பேருந்துகளை ஓட்டுகிறார்களா? என்பதை கண்டறியும் வகையில் நேற்று (19) இரவு விசேட தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
வெல்லம்பிட்டிய பொலிஸாரால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
நேற்று இரவு முதல் இன்று (20) காலை வரை மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, ​​போதையில் பேருந்துகளை செலுத்திய மூன்று சாரதிகளும் பேருந்துகளுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த விசேட தேடுதல் நடவடிக்கைகள் எதிர்வரும் சில தினங்களில் கொழும்பில் மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a comment