Post

Share this post

4 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி இடைநிறுத்தம்

வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் பெற்றுக்கொண்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் 4 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.

இதன்படி, பொலிஸ் பரிசோதகர் ஒருவர், இரண்டு சார்ஜன்ட்கள் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் மேலும் இரு பெண் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் மற்றும் ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் இடமாற்றம் செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பெண் தாக்குதலினால் உயிரிழந்துள்ளதாக உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக உள்ளக விசாரணையையும் பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

Leave a comment