Post

Share this post

பிரபல நடிகை சுனைனாவை எச்சரித்த பொலிஸார்! நடந்தது என்ன?

காதலில் விழுந்தேன், மாசிலாமணி, சமர், தெறி போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளவர் சுனைனா.
தற்போது ’ரெஜினா’ என்ற திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் திடீரென அவர் காணாமல் போனதாக அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் வீடியோ ஒன்றை வெளியிட்டது.
அவர் கடத்தப்பட்டாரா? என்ற கேள்வியும் அதில் எழுப்பப்பட்டது.
இது வைரலானதால் பொலிஸார் விசாரணை நடத்தியுள்ளனர்.
இதில், ’ரெஜினா’ படத்தின் விளம்பரத்திற்காக இந்த வீடியோ பதிவு செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.
இதை தொடர்ந்து பொலிஸார் படக்குழுவினரை எச்சரித்துள்ளனர்..

Leave a comment