கம்பளை பன்விலதென்ன பிரதேசத்தில் சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையமொன்றில் பொலிஸார் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 19 வயதுடைய இளைஞர் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
அந்த வீட்டில் இருந்த நாயும் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்திருந்தது.
கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவொன்று இன்று (21) அதிகாலை குறித்த இடத்தை சுற்றிவளைப்பதற்காக சென்றிருந்தனர்.
இதன்போது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் வீட்டில் வளர்க்கப்பட்ட நாய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.
குறித்த வீட்டில் இருந்த 19 வயது இளைஞன் ஒருவருக்கும் காலில் துப்பாக்கிச் சூடு பதிவான நிலையில் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இளைஞரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல விடாமல் பொலிஸார் தடுத்துள்ளதாக குடும்பத்தினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
“சுடப்பட்ட பிள்ளையை அழைத்துச் செல்ல விடாமல் 45 நிமிடம் உள்ளே வைத்திருந்தனர்.. அவரை அழைத்துச் செல்ல விடாமல் கைவிலங்குடன் உள்ளே வைத்திருந்தனர். 6.15க்கு அவர்களுடன் வாக்குவாதம் செய்து தள்ளிவிட்டு அழைத்துச் சென்றோம்.