முன்னாள் வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் சடலம் தற்போது பொரளை பொது மயானத்தில் நீதித்துறை மற்றும் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் தோண்டி எடுக்கப்படுகிறது.
(செய்திப் பின்னணி)
முன்னாள் வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் சடலம் இன்று (25) தோண்டி எடுக்கப்படவுள்ளது.
ஷாப்டரின் மரணம் தொடர்பில் விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட ஐவரடங்கிய விசேட வைத்திய சபை, அவரது மரணத்திற்கான காரணத்தை கண்டறிய அவரது சடலத்தை தோண்டி எடுக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றில் கோரிக்கை விடுத்திருந்தது.
இதன்படி சடலத்தை தோண்டி எடுப்பதற்கு நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதுடன், விசேட பொலிஸ் பாதுகாப்பில் இன்று தோண்டி எடுக்கப்படும் என சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.