Post

Share this post

வடக்கு புகையிரத சேவை குறித்த அறிவிப்பு

ஜூலை 15 ஆம் திகதிக்குள் கொழும்பில் இருந்து காங்கேசன்துறைக்கு இயக்கப்படும் புகையிரத சேவையை மீண்டும் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

வீதியின் திருத்தப் பணிகள் காரணமாக தற்போது வடக்கு புகையிரத சேவை கொழும்பில் இருந்து அனுராதபுரம் வரை மட்டுமே இயக்கப்படுகிறது.

அநுராதபுரத்தில் இருந்து வவுனியா வரையான வீதியின் திருத்தப் பணிகளை அடுத்த மாதம் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இதன்படி கொழும்பில் இருந்து காங்கேசன்துறை வரை மீண்டும் புகையிரத சேவையை ஆரம்பிக்க முடியும் என மஹவ – ஓமந்தே புகையிரத திட்ட பணிப்பாளர் அசோக முனசிங்க தெரிவித்தார்.

Leave a comment