தனது ஒரே சகோதரியின் திருமண நாளில் மோட்டார் சைக்கிள் விபத்தில் 15 வயது மாணவன் உயிரிழந்துள்ளதாக இங்கிரிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹந்தபாங்கொட, கொட்டிகல பிரதேசத்தை சேர்ந்த ஹந்தபாங்கொட தேசிய பாடசாலையின் பத்தாம் தர மாணவர் தலைவராக இருந்த பிம்சர பிரபோத் ரணசிங்க என்ற மாணவனே இவ்வாறு விபத்தில் உயிரிழந்துள்ளார்.
திருமண நிகழ்வின் புகைப்படங்களை எடுத்துக் கொண்டு மணமகனின் தந்தையுடன் திரும்பிக் கொண்டிருந்த போது குரன, பெவும் பகுதியில் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை வீதியை விட்டு விலகி அருகில் இருந்த வாய்க்காலில் விழுந்துள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த மாணவனும் மணமகனின் தந்தையும் ஹொரணை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மாணவன் உயிரிழந்துள்ளதுடன் மணமகனின் தந்தை மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்த மாணவனின் பிரேத பரிசோதனை இன்று (25) ஹொரணை ஆதார வைத்தியசாலையில் நடைபெறவுள்ளது.
இங்கிரிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.