Post

Share this post

டுபாயில் தங்க நகை கடைகள் – சிக்கிய இலங்கையர்கள்!

டுபாயில் இயங்கும் 3380 தங்க நகை கடைகளில் தங்க பிஸ்கட்டுகளை வரம்பு இல்லாமல் கொள்வனவு செய்ய முடியும் என இன்டர்போல் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த தங்க கட்டிகள் டுபாய் சுங்க சோதனை இயந்திரத்தில் சிக்கினாலும் அவற்றை எடுத்துச் செல்வது குற்றமற்றது என தெரிவிக்கப்படுகிறது.
டுபாய் சுதந்திர வர்த்தக நாடாக இருப்பதால், தங்கக் கட்டிகளை கொண்டு செல்வதற்கு எந்த தடையும் இல்லை.
கடந்த காலங்களில் டுபாயில் இருந்து கட்டுநாயக்கவிற்கு தங்க கட்டிகளை கடத்த முயன்ற 961 இலங்கையர்கள் சிக்கிக் கொண்டனர்.
டுபாயில் தடையின்று கொள்வனவு செய்யும் வாய்ப்பு உள்ளதால் இலங்கையர்கள் இவ்வாறு சிக்கிக் கொள்தாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Leave a comment