Post

Share this post

உலக வங்கி இலங்கைக்கு கடனுதவி!

நிபந்தனைகளை தளர்த்தி இலங்கைக்கு 450 மில்லியன் டொலர் கடனுதவிக்கான அனுமதியை உலக வங்கி வழங்கியுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் முயற்சிக்கு அமைய உலக வங்கி தனது நிபந்தனைகளை தளர்த்தியுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.
நிதியமைச்சின் அதிகாரிகள், மத்திய வங்கியின் அதிகாரிகள் உட்பட அதிகாரிகள் வழங்கிய புள்ளிவிபரங்களின் அடிப்படையில் தாயரிக்கப்பட்ட ஆவணத்தை ஜனாதிபதி பணிக்குழாமின் தலைவர் சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய உலக வங்கியிடம் வழங்கி பின்னர் இந்த நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.
உலக வங்கி வழங்க இணங்கியுள்ள 450 மில்லியன் டொலர் இந்த வருட இறுதிக்குள் இலங்கைக்கு கிடைக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a comment