பாகிஸ்தானில் பணவீக்கம் 38 சதவீதமாக அதிகரித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
அதன்படி, அந்நாட்டில் உணவுப் பொருட்களின் விலை, வீட்டு வாடகை, மின்சாரம், எரிவாயு மற்றும் போக்குவரத்து சார்ந்த கட்டணம் போன்றவை உயர்வடைந்துள்ளன.
கடந்த ஏப்ரல் மாதம் அந்நாட்டின் பணவீக்கம் 36.4 வீதமாக இருந்த நிலையில் ஒரே மாதத்தில் 1.6 வீதமாக இந்த எண்ணிக்கை உயர்வடைந்துள்ளது.
கடந்த 2022ஆம் ஆண்டு மே மாதத்துடன் இந்த ஆண்டு மே மாதத்தை ஒப்பிடும்போது நுகர்வோர் பொருட்கள் மீதான விலை கிராமப் பகுதியில் 52.4 வீதமாகவும், நகர பகுதிகளில் 48.1 வீதமாகவும் அதிகரித்துள்ளது.
இதேவேளை இம்மாதமளவில் இது குறைவடையலாம் என எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பணவீக்க சதவீதம் இலங்கையுடன் ஒப்பிடும் போது அதிகமாகும்.
கடந்த மே மாதத்தில் இலங்கையில் இந்த எண்ணிக்கை 25.2 வீதமாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.