ஆடம்பார கார்களை பலர் தங்கள் வாழ்நாள் கனவாக வைத்திருப்பார்கள். ஆனால் ஆடம்பரம் நிறைந்த காரில் ஒரு தேனீர் கடையை மும்பையில் 2 இளைஞர்கள் அவர்களின் ஆடம்பார காரை தேனீர் கடையாக மாற்றி, பார்ப்பவர்களை வியப்பில் உள்ளாகியுள்ளனர்.
மன்னு சர்மா மற்றும் அமித் கஷ்யப் ஆகியோர் சுமார் 2 கோடி மதிப்புள்ள ஆடம்பார காரின் பின்புறம் 20 ரூபாய்க்கு தேனீர் வியாபாரம் செய்து வருகின்றனர்.
அந்தேரி, மேற்கு புறநகர் பகுதியில் உள்ள லோகந்தவாலாவில் அவர்கள் 6 மாதங்களாக இந்த ஆடம்பார காரில் கார்தேனீர் கடையை நடத்தி வருகின்றனர்.
இதனை தொடர்ந்து அந்த இளைஞர்கள் கருத்து தெரிவிக்கையில் – நாங்கள் ஒருநாள் இரவில் தேனீர் குடிப்பதற்காக அலைந்து கொண்டிருந்தோம். ஆனால் அந்த நேரத்தில் தேனீர் கடையை கண்டுபிடிக்க முடியவில்லை.
அப்போது தான் சொந்தமாக தேனீர் கடை திறக்க திட்டமிட்டோம், நாங்கள் ஆடம்பார காரில் தேனீர் விற்பதன் மூலம் பொருளாதார வசதி இல்லாதவர்கள் மட்டும் தான் தேனீர் விற்பார்கள் என்ற எண்ணம் தவறு என்பதை நிரூபித்துவிட்டோம்.
இங்கு சைக்கிளில் செல்பவர்களும் ஆடம்பார காரில் வருபவர்களும் கூட எங்கள் தேனீரை விரும்பி பருகிறார்கள். இருவரும் ஒரு மாதம் பல்வேறு சமையல் குறிப்புகளை கொண்டு வீட்டிலேயே தேனீர் தயாரிக்க பயிற்சி செய்து, இறுதியில் ஒரு செய்முறையை உறுதி செய்தோம்.
பின்னர் ஆடம்பார காரில் தேனீர் விற்பனை செய்ய தொடங்கினோம். என்று அவர்கள் கருத்து தெரிவித்தனர்.