Post

Share this post

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

இலங்கையில் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்றையதினத்துடன் ஒப்பிடுகையில் இன்றைய தினம் (15) தங்கத்தின் விலை மேலும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில், தங்க நிலவரப்படி ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலையானது 597,908 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இன்றைய தினம் 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 168,750 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அத்துடன், 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 154,750 ரூபாவாகவும், 21 கரட் தங்கப் பவுண் ஒன்று 147,700 ரூபாவாகவும் இன்றையதினம் பதிவாகியுள்ளது.

Leave a comment