அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்ல ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளிக்கவில்லை என்றால், பாராளுமன்றத்தை கலைக்க நேரிடும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அந்த கட்சியின் தலைவர்களுக்கு அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
ஸ்திரமற்ற நிலைமையில் வீழ்ந்து கிடந்த நாட்டை படிப்படியாக முன்நோக்கி கொண்டு வந்துள்ள சந்தர்ப்பத்தில் அனைவரது ஒத்துழைப்புகளும் அவசியம் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
அண்மையில் நடத்தப்பட்ட கூட்டம் ஒன்றில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாவட்ட தலைவர்கள் சிலர் கலந்துக்கொள்ளாத காரணத்தினால், ஜனாதிபதி இதனை அந்த கட்சியின் தலைவர்களிடம் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் இந்த கலந்துரையாடலின் பின்னர் மறுநாள் ஆளும் கட்சியின் தலைவர்களின் கூட்டம் நடைபெற்றதுடன் அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களுக்கு தமது கட்சி முழுமையான ஒத்துழைப்பகளை வழங்கும் என அதில் கலந்துக்கொண்ட பொதுஜன பெரமுனவின் தலைவர்கள் ஜனாதிபதியிடம் உறுதியளித்துள்ளனர்.