Post

Share this post

சமோசாவை சாப்பிட்டால் 71,000 ரூபா பரிசு!

நீங்கள் பல பிரமாண்ட பரிமாணங்களை பார்த்திருக்கலாம். ஆனால் 12 கிலோ எடையுள்ள பிரமாண்ட சமோசாவை காண்டதுண்டா ?
அதை பார்க்கவும், ருசிக்கவும் வேண்டும் என்றால், உத்தரபிரதேச மாநிலம் மீரட் நகரில் உள்ள ´கவுஷல் சுவீட்ஸ்´ கடைக்குத்தான் செல்ல வேண்டும்.
இங்கு தான், 12 கிலோ எடை கொண்ட ´பாகுபலி´ சமோசா தயாரிக்கப்படுகிறது.
கவுஷல் சுவீட்ஸ் கடையை 3 ஆவது தலைமுறையாக நடத்தி வருபவர் சுபம் கவுஷல். இவருக்கு ஏதாவது வித்தியாசமாக செய்து வாடிக்கையாளர்களை கவர ஆசையின் நிமித்தம். இந்த பிரமாண்ட ´பாகுபலி´ சமோசாவை தயாரிக்கும் யோசனை செயற்படுத்தினார்.
முதலில் 4 கிலோ சமோசாக்களையும், அடுத்து 8 கிலோ சமோசாக்களையும் தயாரித்தார், தற்போது 12 கிலோ சமோசாவில் இறுதியில் கண்டுபிடித்தார்.
இதன் உள்ளே உருளைக்கிழங்கு, பட்டாணி, வாசனைப்பொருட்கள், பன்னீர் மற்றும் உலர் பழங்கள் அடங்கிய மசாலாவின் எடை மட்டுமே மொத்தம் 7 கிலோ.
ஒரு ´பாகுபலி´ சமோசாவை தயாரிப்பதற்கு சமையல் கலைஞர்களுக்கு 6 மணி நேரம் பிடிக்கிறது. அதில், இந்த பிரமாண்ட முக்கோண வடிவத்தை எண்ணெயில் பொரிப்பதற்கு மட்டும் ஆகும் ஒன்றரை மணி நேரமும் எடுக்கிறது.
இந்த பாகுபலி சமோசா அறிமுகம் செய்யப்பட்டதுமே மிகவும் பிரபல்யம் ஆகிவிட்டது.
பலரும் தங்கள் பிறந்தநாளின் போது கேக்களுக்கு பதிலாக இந்த சமோசாவை வாங்கி வெட்டி கொண்டாடி வருகின்றனர்.
இதுவரை சுமார் 50 ´பாகுபலி´ சமோசாக்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் மகிழ்ச்சியில் உள்ள கடைக்காரர் கவுஷல், ஒரு அதிரடி போட்டியையும் அறிவித்திருக்கிறார்.
அதாவது, தனிநபராய் 1/2 மணி நேரத்தில் இந்த சமோசாவை சாப்பிட்டு முடித்து விடுபவர்களுக்கு 71,000 /= ரூபா பரிசு.
ஒரு பாகுபலி சமோசாவின் விலை 1500 /= ரூபாவாகும் ஆனால் சமோசா பிரியர்களுக்கு இந்த விலை ஒரு அங்குள்ள வாடிக்கையாளர்கள் பெரிதும் பொறுப்பேடுக்காது இந்த சமோசாவை உண்டு மகிழ்ந்து வருகின்றனர்.

Leave a comment